மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நல்லா சர்க்கஸ் பண்ற மேன் நீ .. தன்னைத்தானே கலாய்த்து நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் 2017ம் ஆண்டு வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். இவர் இதற்கு முன்பு செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
பின்னர் மேயாதமான் திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் வந்த நிலையில் அவர் கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர், மாபியா போன்ற திரைப்படங்களில் நடித்தார். மேலும் இவரது நடிப்பில் உருவான ஹாஸ்டல், பொம்மை, ஓமணப் பெண்ணே போன்ற திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. மேலும் அவரது கைவசம் பத்து தல,ருத்ரன், இந்தியன்-2 உள்ளிட்ட படங்கள் உள்ளன.
No amount of motivation quotes out there are enough! ‘ஹேய் நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ’ day 😎 pic.twitter.com/zMdcWVPhZD
— Priya BhavaniShankar (@priya_Bshankar) June 25, 2021
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர் அவ்வப்போது தனது போட்டோஷூட், உடற்பயிற்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது கயிற்றில் தலைகீழாக தொங்கி வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அத்துடன் அவர், ஹேய் நல்லா சர்க்கஸ் பண்ற மேன் நீ என தன்னைத்தானே கலாய்த்தும் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.