மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல் முறையாக ராகவா லாரன்சுக்கு ஜோடியாகும் விஜய் டீவி பிரபலம்..! விரைவில் அறிவிப்பு..!
நடன இயக்குனரான இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குன, நடிகர், இயக்குனர் என பண்முகத்திறமை கொண்ட இவர் இயக்கிய காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
தற்போது காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக்கான லட்சுமி பாம் படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமாரை வைத்து இயக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க. ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் புது படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் லாரன்சுக்கு ஜோடியாக நடிக்க நடிகை ப்ரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சங்கர் இயக்கத்தில், கமல் நடித்துவரும் இந்தியன் 2 படத்தில் பிசியாக உள்ளார் ப்ரியா.