மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவருடன் விவாகரத்து சர்ச்சை! ரசிகரின் கேள்விக்கு தொகுப்பாளினி பிரியங்கா அளித்த அசத்தல் பதில்!!
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவர் மாகாபாவுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
மேலும் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு, நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். பிரியங்கா பிரவீன் குமார் என்பவரை காதலித்து கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் அவர் சமீபகாலமாக பிரவீன் குறித்து எதுவும் பேசுவதில்லை. அவருடனான புகைப்படங்களையும் வெளியிடுவதில்லை. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் FREEZE டாஸ்க்கில் கூட பிரவீன் வரவில்லை. இதற்கிடையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தகவல்கள் பரவி வந்தது.
இந்நிலையில் அண்மையில் ரசிகர் கேட்ட கேள்விக்கு பிரியங்கா அளித்த பதில் கணவருடன் விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது ரசிகர் ஒருவர் பிரியங்காவிடம், திருமணமான பிறகு எல்லாவற்றையும் எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவர், ’நம்மை புரிந்து கொள்ளும் கணவர் இருந்தால், கணவருக்கு நாம் விஸ்வாசமாக இருந்தால் எல்லாம் சாத்தியம்தான்’ என பதிலளித்துள்ளார்.