பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இனி இவர்தான்.. சூப்பர் சிங்கரில் இருந்து திடீரென பிரியங்காவை தூக்கிய விஜய் டிவி! ஓ.. இதுதான் காரணமா??
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவராக இருப்பவர் பிரியங்கா. இவரது கலகலப்பான பேச்சிற்கும், சிரிப்பிற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பல சீசன்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
மேலும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் அவரே தொகுத்து வழங்கினார். இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதிவரை சென்ற இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதற்கிடையில் சமீபத்தில் தொடங்கிய சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை மாகாபா மற்றும் மைனா நந்தினி இருவரும் தொகுத்து வழங்கினர்.
இந்நிலையில் பிக்பாஸ் முடிவிற்குப் பிறகு பிரியங்கா மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்த நிலையில் தற்போது ஒரே வாரத்தில் மீண்டும் மைனா நந்தினியே தொகுப்பாளினியாக மாற்றப்பட்டுள்ளார்.
பிரியங்கா தனது பிக்பாஸ் நண்பர்களாக பாவனி, அபிஷேக், மதுமிதா, அமீர் ஆகியோருடன் ஹைதராபாத் சென்றுள்ளாராம். கடந்த வாரம் வரை பிரியங்கா வரவில்லையாம். இவ்வாறு அடிக்கடி பிரியங்கா நிகழ்ச்சியில் இருந்து பிரேக் எடுப்பத்தால் இந்த சீசன் முடியும் வரை மைனா நந்தினியே தொகுப்பாளினியாக வைத்து முடித்துவிடலாம் என நிகழ்ச்சி குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது