மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நெல்சனுடன் ஊர் சுற்றும் பிரியங்கா மோகன்.. வைரலாகும் புகைப்படம்.!
கர்நாடகாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரியங்கா மோகன், முதன் முதலில் 2019ம் ஆண்டு ஒரு கன்னடத் திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அதன் பின்னர், 2021ம் ஆண்டு நெல்சன் இயக்கிய "டாக்டர்" படத்தில் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து பிரியங்கா மோகன், சூர்யாவுடன் "எதற்கும் துணிந்தவன்" படத்திலும், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் "டான்" படத்திலும் நடித்திருந்தார். தற்போது அவர் தனுஷுடன் "கேப்டன் மில்லர்" படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், "ஜெயிலர்" படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் அவரது குடும்பத்தினருடன் லண்டன் சுற்றுலா சென்றுள்ளார். மேலும் இவர்களுடன் பிரியங்கா மோகன், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி ஆகியோரும் லண்டன் சென்றுள்ளனர்.
நெல்சனின் மனைவி மோனிஷாவிற்கு நெருங்கிய தோழியாக மாறிவிட்ட பிரியங்கா மோகன், ஏற்கனவே நெல்சன் குடும்பத்துடன் சென்ற துபாய் சுற்றுலாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரியங்கா மோகன், நெல்சன் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.