#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மிஸ்டர் லோக்கலால் 20 கோடி நஷ்டம்ப்பே... நீதிமன்றத்தில் கதறிய தயாரிப்பாளர்.. சிவா செய்யப்போவது என்ன?.!
உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளார் ஞானவேல்ராஜா மீது சிவகார்த்திகேயன் தொடர்ந்துள்ள வழக்கிற்கு அவர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இயக்குனர் எம்.ராஜேஷ் கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிஸ்டர் லோக்கல் படம் பல விமர்சனங்களை பெற்று, வசூல் ரீதியாக பெரும் சரிவை சந்தித்தது.
அத்துடன் இப்படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ரூ.11 கோடி மட்டுமே கொடுத்துள்ளார். இதனால், சிவகார்த்திகேயன் தரப்பில் அதற்கான டிடிஎஸ் தொகையை வருமானவரித் துறையில் செலுத்த கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அத்துடன் தனக்கு வரவேண்டிய சம்பள பாக்கியை செலுத்தும் வரை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கும் அனைத்து படங்களிலும் அவர் முதலீடு செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும், ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான ஓடிடி வெளியீடு மற்றும் தியேட்டர் உரிமைகளை ரத்து செய்யவும் சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், சிவகார்த்திகேயன் தன்னை கட்டாயப்படுத்தியதால் மட்டுமே மிஸ்டர் லோக்கல் படம் எடுக்கப்பட்டது எனவும், மிஸ்டர் லோக்கல் படத்தால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டபின், வழக்கு விசாரணையை நீதிபதி எம். சுந்தர், ஏப்ரல் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்து இருக்கிறார்.