மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரிலீஸ் நேரத்தில் இந்தியன் படத்திற்கு ஏ.ஆர் ரகுமானால் வந்த சிக்கல்.! பின் நடந்த ட்விஸ்ட்!!
கடந்த 1996 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று ஹிட் கொடுத்த திரைப்படம்தான் இந்தியன். இதில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் என பலரும் நடித்திருந்தனர். இந்தியன் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான்தான் இசையமைத்திருந்தார்.
பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெல்லாம் செம ஹிட்டானது. இந்தியன் படத்திற்கான பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது ஸ்டுடியோவில் கம்போசிங் செய்தாராம். அதனை அவர் ஹார்ட் டிஸ்க் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளார். அப்பொழுது விமான நிலையத்தில் ஏ.ஆர் ரகுமானின் ஹார்ட் டிஸ்க்கை அதிகாரிகள் ஸ்கேன் செய்துள்ளனர்.
அப்பொழுது டிஸ்கில் உள்ள அனைத்தும் டெலிட் ஆகியுள்ளது. அது தெரியாமல் ஏ.ஆர் ரகுமான் டிஸ்கில் உள்ள பாடல்களை இயக்குனர் சங்கருக்கு போட்டு காட்ட முயற்சி செய்துள்ளார். ஆனால் ஹார்ட் டிஸ்கில் உள்ள அனைத்தும் டெலிட் ஆகியிருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது. ரிலீஸ் தேதி அறிவித்த பின்னர் இப்படி ஒரு சிக்கல் வந்ததால் அவர் பெரும் பதற்றம் அடைந்துள்ளார். பின்னர் அவசர அவசரமாக வேறு டியூன்கள் கம்போஸ் செய்து கொடுத்து பாடல்களை முடித்துள்ளாராம். பிறகு படம் வெளிவந்து செம ஹிட் ஆகியுள்ளது.