#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆனா சர்ப்ரைஸ் னு ஒன்னு பண்ண பாரு தங்கம்.. வேற லெவல் டி!! புகழ் பிறந்தநாளில் காதலி மனைவி கொடுத்த அன்பு பரிசு!!
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் புகழ். அதனை தொடர்ந்து வெள்ளிதிரைக்கு தாவிய அவர் அஜித், சூர்யா, சந்தானம் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் காமெடியனாக மட்டுமின்றி ஷோ கிப்பர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரமெடுக்கிறார். இவர் பென்சியா என்ற பெண்ணை கடந்த 5 வருடங்களாக காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய புகழுக்கு அவரது மனைவி சர்ப்ரைஸ் கிஃப்ட்டாக நாய் ஒன்றை கொடுத்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராமில் புகழ் இவ்வாறு பதிவிட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார். ரொம்ப நன்றிடி பொண்டாட்டி. ஆனா சர்ப்ரைஸ் னு ஒன்னு பண்ண பாரு தங்கம்.. வேற லெவல் டி என பதிவிட்டு இருக்கிறார்.