மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமண நாளில் ஹேப்பியான நியூஸ் சொன்ன புகழ்.! அழகிய புகைப்படம்! குவியும் வாழ்த்துக்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனது காமெடியால் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து பெருமளவில் பிரபலமானவர் புகழ். தொடர்ந்து வெள்ளிதிரையில் கால்பதித்த அவர் பல டாப் நட்சத்திரங்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
புகழ் காமெடியனாக மட்டுமல்லாமல் ஷோ கிப்பர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரமெடுக்கிறார். இவர் பென்ஸி என்ற பெண்ணை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் திருமண நாளை கொண்டாடும் அவர்கள் அழகிய புகைப்படத்துடன் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதாவது புகழ் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் தகவலை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.