திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மிஸ் யூ மாமா... அச்சு அசல் மறைந்த நடிகர் வடிவேலு பாலாஜியாகவே மாறிய புகழ்... வைரல் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்கள்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து பெருமளவில் பிரபலமானவர் நடிகர் வடிவேலு பாலாஜி. அதனை தொடர்ந்து அது இது எது நிகழ்ச்சியில் இவர் வடிவேலுவின் கதாபாத்திரத்திங்களான நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என அனைத்து கெட்டப்பிலும் வந்து அசால்டாக கலக்கி ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இந்த நிலையில் 45 வயது நிறைந்த அவர் கடந்த செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. மேலும் தற்போது வரை அவரது காமெடிகளும், நினைவுகளும் மக்கள் மனதை விட்டு நீங்கவில்லை.
இந்நிலையில் வடிவேலு பாலாஜியுடன் நெருக்கமாக இருந்த நபர்களில் ஒருவர் குக் வித் கோமாளி புகழ். இவர் இந்த வாரம் வடிவேலு பாலாஜி போலவே வேடமிட்டு வந்து தன்னுடைய மாமா வடிவேல் பாலாஜிக்காக தான் இந்த கெட்டப்பை போட்டுருக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வடிவேல் பாலாஜி குறித்து உருக்கமாக பதிவு செய்துள்ளார்.