மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாளை வெளியாகிறது புஷ்பா 2 படத்தின் முக்கிய அப்டேட்; மரண வைட்டிங்கில் ரசிகர்கள்.!
சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், மிரோஸ்லாவ் குபா ஒளிப்பதிவில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான புஷ்பா படத்தின் தொடர்ச்சியாக இப்படம் வெளியாகவுள்ளது.
தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் நடைபெறும் செம்மரக்கடத்தல் மற்றும் அதன் பின்னணியில் இயங்கும் கும்பலின் செயல்பாடுகள் குறித்த மையக்கருவை கொண்ட படம், பல திருப்பத்துடன் தனது முதல் பாகத்தை நிறைவு செய்தது.
அதனைத்தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகம் படமாக்கப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் 15, 2024 அன்று திரையரங்கில் புஷ்பா 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் போஸ்டர் ஒன்றும் சில மாதங்களுக்கு பின் வெளியிடப்பட்டு வைரலாகி வந்தது. இந்நிலையில், புஷ்பா படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்டேட்டுக்காக தொடர்ந்து காத்திருந்த ரசிகர்களுக்கு நாளை வெளியாகப்போகும் அறிவிப்பு எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், ராவ் ரமேஷ் உட்பட பலரும் நடித்திருந்தனர்.