மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நடிகையின் தற்கொலை வழக்கில் கைதான புஷ்பா பட நடிகர்.. என்ன நடந்தது.?
கடந்த 2021ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் "புஷ்பா". முட்டம் செட்டி மீடியாவுடன் இணைந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இத்திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
மேலும் இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுனின் நண்பனாக கேசவா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ஜெகதீஷ். இவர் ஜூனியர் ஆர்டிஸ்ட்டான சக பெண் நடிகை ஒருவர், ஒரு ஆணுடன் நெருக்கமாக இருந்தபோது, அதை அவருக்குத் தெரியாமல் புகைப்படம் எடுத்துள்ளார்.
மேலும் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அந்த நடிகை நவம்பர் 29ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து ஜெகதீஷை கடந்த சில நாட்களாக போலீசார் தேடி வந்தனர்.
இதையடுத்து இன்று பஞ்சகுட்டா போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஜெகதீஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் "புஷ்பா 2" படத்திலும் ஜெகதீஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவரது கைது படப்பிடிப்பில் பாதிப்பு ஏற்படுத்துமா என்ற கவலையில் ரசிகர்கள் உள்ளனர்.