மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புஷ்பா திரைப்பட நடிகர் மீது வழக்குப்பதிவு.! படக்குழுவினர் அதிர்ச்சி.!
தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அல்லு அர்ஜுன், இவரது நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது. சுகுமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுனோடு இணைந்து, ராஷ்மிகா, பகத் பாசில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்ததை தொடர்ந்து, தற்போது இந்த திரைப்படத்தின் 2ம் பாகத்திற்கு அந்த பட குழு தயாராகி வருகிறது. ஏற்கனவே புஷ்பா திரைப்படத்தின் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு ஓரளவிற்கு முடிவுக்கு வந்துவிட்டதாகவே சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில்தான் இந்த திரைப்படத்தில் புஷ்பாவின் நண்பராக கேஷவ் என்ற கதாபாத்திரத்தில் ஜெகதீஷ் என்பவர் நடித்திருந்தார். நடிகர் ஜெகதீஷ் தற்போது ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றியுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக, மனமுடைந்த அந்த பெண், தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். ஆகவே இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடிகர் ஜெகதீஷை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தெலுங்கு திரை துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.