#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"அந்த இரவை என்னால் மறக்கவே முடியாது" - பிரபல பாடகருடன் ஏற்பட்ட அனுபவத்தை புகைப்படத்துடன் பகிர்ந்த லட்சுமி ராய்
நடிகர் ஜெயம் ரவி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற படம் தாம் தூம். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராய். இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் சொல்லும் அளவுக்கு இவர் தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வலம்வர முடியியவில்லை.
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா, அரண்மனை, சவுகார் பேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து தமிழில் சரியாக வாய்ப்புகள் அமையாததால் பாலிவுட் பக்கம் சென்றார் அம்மணி. அம்மணியை கைவிடாத பாலிவுட் ஜூலி 2 படம் மூலம் வாய்ப்பு கொடுத்தது. ஜூலி 2 படத்திற்காக தனது உடல் அமைப்பு முழுவதையும் மாற்றி பார்ப்பதற்கே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் நடிகை லட்சுமி ராய். மேலும் அவ்வப்போது செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்துவார், சமீபத்தில் ஒரு பீச்சில் இவர் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் மிகவும் வைரலானது.
இந்நிலையில் உலகளவில் பிரபலமான செனகலிய-அமெரிக்க ஆர்&பி பாடகர் எகான் இந்திய வந்துள்ளார். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லட்சுமி ராய் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படங்களை தனது த்விட்டேர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராய், "உங்களை இந்தியாவில் மீண்டும் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி. இந்த இரவை மிகவும் சிறப்பாகமா அமைந்தது" என பதிவிட்டுள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் எடுத்த மற்ற புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
Was lovely to see u again in India @Akon what a night had a blast 💐💖 pic.twitter.com/sbhbFfDvvX
— RAAI LAXMI (@iamlakshmirai) December 10, 2018
❤️❤️❤️ pic.twitter.com/kguXkdsGQS
— RAAI LAXMI (@iamlakshmirai) December 10, 2018