மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"விசித்திராவை பாராட்டி பதிவிட்டுள்ள ரச்சிதா மகாலட்சுமி!" வைரலாகும் ட்வீட்!
"மேக மண்டலா" என்ற கன்னடத் தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமானவர் ரச்சிதா மகாலட்சுமி. விஜய் டிவியில் ஒளிபரப்பான "பிரிவோம் சந்திப்போம்" தொடர் மூலம் பிரபலமானார். இதையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான "இளவரசி" தொடரில் நடித்தார்.
இதையடுத்து விஜய் டிவியின் "சரவணன் மீனாட்சி" இரண்டு மற்றும் மூன்றாம் பாகத்தில் நடித்திருந்தார். இதையடுத்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ரட்சிதா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டார்.
தற்போது பிக் பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாகி இருக்கும் நிலையில், அதில் இவரது முன்னாள் கணவர் தினேஷ் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 75 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் தினேஷுக்கும், விசித்ராவுக்கும் அடிக்கடி மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து ரட்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "சிங்கப்பெண்ணே" பாடலை பதிவிட்டு "தி பைட்டர்" என்று கேப்ஷனுடன் விசித்ராவுக்கு ஆதரவாகவும், தினேஷுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.