#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதுக்காக மட்டும் தான் திருமணம் செய்துகொண்டேன்! கபாலி பட நடிகை கூறியதை கேட்டு செம ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி ஹிந்தியில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் அவர் மலையாளம், பெங்காலி, மராத்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவருக்கு என பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த அவர், நான் 8 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த பெனட்டிக் டைலர் என்ற இசைக்கலைஞரை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை கிடையாது. வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டால் எளிதாக விசா கிடைக்கும் என்பதால் மட்டும்தான் அவரை திருமணம் செய்து கொண்டேன்.
இங்கிலாந்து இளைஞரை திருமணம் செய்தாலும் நான் தற்போது இந்தியாவில்தான் இருக்கிறேன். அவ்வப்போது இங்கிலாந்துக்கு சென்று எனது கணவரை சந்தித்துவிட்டு வருவேன் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.