மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பத்தல பத்தல.. பர்த்டே பார்ட்டியில் நடிகர் கமலுடன் செம ஆட்டம் போட்ட பிரபல முன்னணி நடிகை.!
தமிழ் சினிமாவில் உலக நாயகனாக, ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த டாப் நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருக்கும்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ‘விக்ரம்’ திரைப்படம் சூப்பர் ஹிட்டாகி பெரும் வசூல் சாதனை படைத்தது. அவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் கமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சான பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் அவர் அண்மையில் தனது 68வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நடிகர் கமலின் பர்த்டே பார்ட்டியும் ஆட்டம், பாட்டம் என பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகை ராதிகா கமலுடன் பத்தல பத்தல பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.