மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"என் வாழ்வில் விளக்கேற்றியவர்" - பாரதிராஜாவுக்காக பிரான்சில் நடிகை ராதிகா செய்த செயல்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..!!
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர்தான் இயக்குனர் பாரதிராஜா. கடந்த வாரம் இவர் மதுரை விமான நிலையத்தில் மயக்கமடைந்ததை தொடர்ந்து, ஒருநாள் மதுரையிலேயே ஓய்வெடுத்து பின் சென்னைக்கு திரும்பினார்.
மேலும் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் அவர் ஓய்வெடுத்ததை தொடர்ந்து, மீண்டும் அஜீரண கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது பரிசோதனைகள் முடிந்து சிகிச்சை நடைபெற்று வருகிறது. இது குறித்து அவரது மகன் கூறுகையில், உடலில் நீர் சத்து குறைபாடு இருப்பதால் உடல்நிலை சோர்வாக இருக்கிறார். அதனால் ஓய்வு தேவை. எனவே தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறினார்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா விரைவில் நலம்பெற வேண்டும் என்று பிரான்ஸில் உள்ள லூர்து தேவாலயத்தில் நடிகை ராதிகா சரத்குமார் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.