நீங்க வந்தா நாங்க வரோம்! இப்போ இல்லனா எப்போ? ரஜினியின் முடிவு குறித்து உருக்கமாக மனம் திறந்த நடிகர் ராகவா லாரன்ஸ்!



ragava lawerance tweet about rajini decision

நடன இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டு விளங்குபவர் ராகவா லாரன்ஸ். நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான அவர் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அந்த கட்சியில் இணைந்து அவருக்காக வேலை செய்வேன் என சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கிடையில் நடிகர் ரஜினி தான் முதல்வர் வேட்பாளராக நிற்க மாட்டேன் என கூறியிருந்தார் 

இந்நிலையில் இது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த வாரம் நான் ட்வீட் போட்டதும் மீடியா நண்பர்கள் மற்றும் பலரும் என்னிடம், எல்லா கட்சியும் உங்களுக்கு உதவி செய்துள்ளது. எனவே அனைவரையும் மதிப்பதாகவும், ரஜினி கட்சி தொடங்கினால் அவரை ஆதரிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தீர்கள். ரஜினியை முதல்வர் வேட்பாளராக அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் ஒருவரை ஆதரிப்பீர்களா என்று கேட்கின்றனர்.

ragava lawrence

ரஜினி முதல்வர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். லீலா பேலஸ் ஹோட்டலில் தலைவர் நான் முதல்வர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என தனது முடிவை அறிவித்த போது, நான் அவரது முடிவை ஆதரித்தேன். ஏனென்றால் நான் அவருக்கு எதிராக செயல்பட விரும்பவில்லை. ஆனால் முழு மனதோடு என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் மட்டுமல்ல அனைத்து ரசிகர்களும் அப்படித்தான் உணர்கிறார்கள்.

நான் தலைவரிடம் இதைப் பற்றி பேசும்போது அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். தலைவர் முதல்வர் வேட்பாளராக நின்றால் மட்டுமே நான் அவருக்காகச் சேவை செய்ய தயாராக இருக்கிறேன். மற்றவர்களுக்கு அல்ல. தலைவர் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்து முதல்வர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள். நீங்க வந்தா நாங்க வரோம். இப்ப இல்லன்னா எப்போ என லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.