திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்த மனசுதான் சார் கடவுள்.! டான்ஸ் ஜோடி டான்ஸ் போட்டியாளருக்காக ராகவா லாரன்ஸ் செய்த காரியம்.! வைரல் வீடியோ!!
வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள், மக்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ரியாலிட்டி ஷோக்கள் என ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக திகழ்வது ஜீ தமிழ் தொலைக்காட்சி. அண்மையில் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நடந்து முடிந்தது.
அதனைத் தொடர்ந்து நடன நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகிறது. சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர், சினேகா, சங்கீதா நடுவர்களாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறி உள்ளது.
அதாவது போட்டியாளரின் அம்மா ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். அவர் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து அறிந்ததும் நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த போட்டியாளரின் அம்மாவின் மருத்துவ செலவிற்கு உதவுவதாக கூறியுள்ளார். மேலும் மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்வதற்கு வசதியாக போட்டியாளருக்கு பைக்கையும் பரிசாக அளித்துள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில் ராகவா லாரன்ஸ் செயலுக்கு பலரும் பாராட்டு கூறி வருகின்றனர்.