மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென்று ரஜினியை சந்தித்த ராகவா லாரன்ஸ்.. என்ன காரணம் தெரியுமா.?
குரூப் டான்சர்களில் ஒருவராக தன் சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர் ராகவா லாரன்ஸ். அதன் பின்னர் நடன இயக்குனராக மாறிய இவர், தொடர்ந்து நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் பன்முகத்திறமை உள்ளவராக வளர்ந்து நிற்கிறார்.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 28ம் தேதி ராகவா லாரன்ஸ் நடித்த "சந்திரமுகி 2" வெளியாகவுள்ள நிலையில், கோவை, ஹைதராபாத் நகரங்களில் இப்படக்குழுவினர் படத்திற்கான பிரம்மாண்ட ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாசு இயக்கியுள்ள இப்படத்தில் கங்கனா ரனாவத், மஹிமா நம்பியார், லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முன்னதாக 2005ம் ஆண்டு வெளியான "சந்திரமுகி" முதல் பாகத்தில் ரஜினி நடித்துள்ள கேரக்டரில் தான் தற்போது ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார்.
இதையடுத்து, சமீபத்தில் ராகவா லாரன்ஸ் ரஜினியை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். அத்தோடு ஜெயிலர் படத்தின் வெற்றிக்கும் தன் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ராகவா லாரன்ஸ் தற்போது பதிவிட்டுள்ளார்.