இதுதான் என்னுடைய கொள்கை.! அரசியல் என்ட்ரி குறித்து செம தெளிவாக நடிகர் ராகவா எடுத்துள்ள முடிவு!!



ragava-lawrence-not-interested-in-politics

ராகவா லாரன்ஸ் 

நடன இயக்குனரும், பிரபல நடிகருமான ராகவா லாரன்ஸ் கஷ்டப்படும் பல மக்களுக்கும் தன்னால் இயன்ற  பல உதவிகளை செய்து வருகிறார். அவர் சேவையே கடவுள் என்ற அறக்கட்டளையை துவங்கியுள்ளார்.  மேலும் மாற்றம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் டிராக்டர் வழங்கி வருகிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாய மக்களுக்கு உதவும் வகையில் அவர் டிராக்டர்களை வழங்கி வருகிறார்.

விவசாயிகளுக்கு டிராக்டர் 

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கள்ளனேந்தல் பகுதியில் டிராக்டர் வழங்கும் விழா நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசியல் வருகை குறித்து பேசியதாவது, இதை செய்கிறேன் என்னை எம்எல்ஏ ஆக்குங்கள், சேரில் உட்கார வைத்து அழகு பாருங்கள், CM ஆக்குங்கனு எதிர்பார்த்து நான் இதையெல்லாம் செய்யவில்லை. இதன் மூலம் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இது கடவுளுக்கு செய்யும் சேவை. இதில் நான் தெளிவாக இருக்கிறேன். என் அம்மா அதைவிட தெளிவாக இருக்கிறார்.

tractor

ராகவா லாரன்ஸின் கொள்கை 

எனக்கு கூட கொஞ்சம் அரசியல் ஆசை இருந்தது. அரசியலுக்கு வந்தால் இன்னும் நிறைய செய்யலாம் என தோன்றியது. ஆனால் என் அம்மா அரசியலே வேண்டாம் என தெளிவாக கூறிவிட்டார். நான் உதவுவது அரசியலுக்காக அல்ல. எல்லோரும் அரசியலுக்கு வந்துவிட்டு கொள்கையை சொல்வர்கள் . ஆனால் அரசியல் வேண்டாம் என்பதே என்னுடைய கொள்கை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.