திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்த படம் ஓடாது" என்று கூறி ரஜினியை கடுப்பாக்கிய ராகவா லாரன்ஸ்.. அதிர்ச்சியடைந்த ரஜினிகாந்த் திடீரென்று செய்த செயல்.?
தமிழ் திரையுலைகில் நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரசிகர் என்பது எல்லா மேடையிலும் கூறிக்கொண்டே இருப்பார். இவர் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயமே.
இது போன்ற நிலையில், ரஜினி நடித்து 21 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'பாபா' படத்தின் பாடல்களில் ஒன்றான 'மாயா மாயா' பாடலுக்கு நடன இயக்குனராக ராகவா லாரன்ஸ் ஒப்பந்தம் செய்தது படக்குழு. ஆனால் ராகவா லாரன்ஸ் தான் முழு படத்தையும் பார்க்க வேண்டும் அப்போதுதான் பாடலுக்கு நடனமாட முடியும் என்று கூறி இருக்கிறார்.
முழு படத்தையும் போட்டு காட்டிய இயக்குனர் படத்தைப் பார்த்த பின்பு இந்த படம் ஓடாது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முன்பே தெரிவித்து இருக்கிறார் ராகவா லாரன்ஸ். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சூப்பர் ஸ்டார், பட குழுவினரும் ராகவா லாரன்ஸ் மீது கோபமடையாமல் 'மாயா மாயா' பாட்டிற்கு அவரையே நடன இயக்குனராக ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் பெரிய அளவு எதிர்பார்ப்பு வைத்த 'பாபா' திரைப்படம் படம் ராகவா லாரன்ஸ் கூறியபடியே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. சமீபத்தில் கொண்டாடப்பட்ட ரஜினிகாந்தின் பிறந்த நாளிற்கு இந்த திரைப்படம் ரீரிலிஸ் செய்யப்பட்டும் தோல்வியை தழுவியது. ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ராகவா லாரன்ஸ் சொல்லியும் கேட்காமல் சூப்பர் ஸ்டார் இந்த முடிவை எடுத்தது மற்ற ரசிகர்களை வருத்தமடைய செய்திருக்கிறது.