மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் தற்கொலை! வருத்தத்தில் திரைத்துறையினர்.
தமிழ் சினிமாவில் முதலில் ராஜா சின்ன ரோஜா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ராகவி. அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் சின்னத்திரையில் ஒளிபரப்பான திருமதி செல்வம்,மகாலட்சுமி என்ற சீரியல்களின் மூலம் பிரபலமானவர்.
அதன் பின் சசிக்குமார் என்பவரை திருமணம் செய்து செட்டிலாகியுள்ளார். இந்நிலையில் தற்போது வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பின்னர் போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றிய போது அவர் ராகவியின் கணவர் என தெரியவந்துள்ளது. அவர் தற்கொலைக்கு காரணம் கடன்சுமை என கூறப்படுகிறது. இதற்கிடையில் ராகவி தன் கணவருக்கு மகேஷ் என்பவருக்கு இடையே தொழில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக ராகவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். சசிக்குமார் உண்மையில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை முயற்சியை என விசாரனை நடத்தி வருகின்றனர்.