பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கவர்ச்சி நடிகை ராய் லட்சுமிக்கு இன்று பிறந்தநாள்.. வைரலாகும் புகைப்படம்.!
கோலிவுட் திரை உலகின் பிரபலமான நடிகையான ராய் லட்சுமி இன்று 34 வது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்திருக்கிறார். நடிப்பு மற்றும் அழகினால் ரசிகர்களை கவர்ந்த நடிகை ராய் லட்சுமி.
1984 ஆம் வருடம் மே மாதம் ஐந்தாம் தேதி கர்நாடகத்தில் உள்ள பெல்காம் என்ற இடத்தில் பிறந்தவர் ராய் லட்சுமி. மாடல் அழகியான ராய் லட்சுமி 2005 ஆம் ஆண்டு வெளியான 'கற்க கசடற' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பின் பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததனால் லட்சுமி ராய் என்ற பெயரை ராய் லட்சுமி என்று மாற்றிக் கொண்டார்.
இதன்பின் மங்காத்தா, காஞ்சனா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ராய் லட்சுமி, கிரிக்கெட் வீரர் தோனியுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். 'தி லெஜன்ட்' படத்தில் ஒரே பாடலில் வந்து நடனமாடி ஒரு கோடி சம்பளம் பெற்று இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி அவ்வப்போது அவரின் புகைப்படங்களை போட்டோசூட் செய்து பதிவிடுவதுண்டு. அவ்வாறு இவரின் பிறந்த நாள் புகைப்படம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.