#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ராஜா ராணி 2 அர்ச்சனாவுக்கு திருமணமா?.. அப்போ சீரியலை விட்டு விலக இதுதான் காரணமா?.. தீயாய் பரவும் வீடியோ..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்ற நெடுந்தொடர் ராஜா ராணி. தற்போது இதன் 2-வது சீசன் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், பல்வேறு திருப்பங்களுடன் மக்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.
இந்நிலையில் தான் இத்தொடரில் கதாநாயகியாக நடித்த ஆல்யா மானசா தனது இரண்டாவது பிரசவத்திற்காக சீரியலை விட்டு விலகினார். அத்துடன் தொடரில் வில்லியாக நடித்துவந்த அர்ச்சனாவும் இத்தொடரை விட்டு விரைவில் விலகினார். இது குறித்த காரணத்தையும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதன்பின் சமூகவளைதலங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அர்ச்சனா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதைக்கண்ட ரசிகர்கள் திருமணமா உங்களுக்கு?.. திருமண உடையில் இருக்கிங்க?.. ஓஹோ அப்போ இதுக்காகதான் சீரியலை விட்டு சென்றீர்களா?.. பாவம் அவன் என்று கேள்விகளை மலைபோல குவித்து வைத்துள்ளனர்.