திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
2மணி நேரம்! ஆள் அடையாளமே தெரியாமல் வேறு லெவலில் மாறிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தங்களது கிராமிய கானா பாடல்களால் ரசிகர்களைக் பெருமளவில் கவர்ந்த பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி தம்பதியினர். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் படங்களில் பாடும் வாய்ப்பு குவிந்து வருகிறது.
மேலும் இருவருக்கும் வெளிநாடு உள்ளிட்ட பல இடங்களிலும் மேடை இசை கச்சேரிகளிலும் பங்கேற்று வருகின்றனர். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராஜலட்சுமி அவ்வப்போது வித்தியாசமாக மாடர்ன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகிறார்.
இவ்வாறு பிஸியாக அவர் தனது அழகை மெருகேற்றிக் கொள்ள பியூட்டி பார்லர் சென்று ஃபேஷியல், மெனிக்யூர் , பெடிக்யூர், ஹார்வாஷ் என சுமார் 2 மணி நேரம் செலவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இந்த முழு வீடியோவையும் அவர் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் ராஜலட்சுமியின் மாற்றத்தை கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர்.