திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
எல்லாமே லோன்.. ஏகப்பட்ட கஷ்டங்கள்.! அதைதான் செய்திருப்போம்.! பாடகி ராஜலட்சுமி வேதனை!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்று பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவர்களுக்கு வெள்ளித்திரையில் படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இருவரும் இணைந்து பாடிய சின்ன மச்சான் பாடல் செம ஹிட்டானது.
மேலும் ராஜலட்சுமி புஷ்பா படத்தில் இடம்பெற்று செம ரீச்சான ஏ சாமி வாயா சாமி பாடலை பாடியிருந்தார். அதுமட்டுமின்றி அவர்கள் நடிகர்களாக அவதாரம் எடுத்து இருவரும் இணைந்து இருளி என்ற படத்தில் நடித்துள்ளனர். மேலும் ராஜலட்சுமி லைசென்ஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பாடகி ராஜலக்ஷ்மி தனது வாழ்க்கை
அனுபவங்கள், கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது,
எங்களது தொழிலிலும், வாழ்க்கையிலும் நிறைய சவால்கள் உள்ளது. நாங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகிட்டோம். நிறைய சம்பாதித்து விட்டோம் என்றெல்லாம் சொல்றாங்க. நிறைய விமர்சனங்கள் வருகிறது. ஆனால் அதெல்லாம் உண்மை கிடையாது. கொரோனா காலத்தில் கச்சேரிலாம் எதுவும் வரவில்லை. பணமில்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டோம்.
வீடு, கார் எல்லாம் லோன் போட்டுதான் வாங்கினோம். கடனை அடைப்பதற்காக பணம் இல்லாமல் பட்ட கஷ்டங்கள் ஏராளம். இப்ப கூட நான் என் கணவர்கிட்ட கேட்பேன். மறுபடியும் கொரோனா காலம் மாதிரி கஷ்டம் வந்தால் என்ன செய்றதுனு. அதற்கு அவர் இவற்றையெல்லாம் பேங்க் ஆபீஸர்ஸ்கிட்ட விட்டுட்டு மீண்டும் கிராமத்துக்கே போய்விடலாம் என்று சொல்வார் என கூறியுள்ளார்.