தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாக ராஜமெளலி தான் முக்கிய காரணம்.! மணிரத்னம் பெருமிதம்..
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவானதே 'பொன்னியின் செல்வன்' திரைபடமாகும். இந்த நாவலை திரைபடமாக்க எம்.ஜி.ஆர் காலத்தில் ஆரம்பித்து கமல்ஹாசன் வரையிலும், தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் முயன்று நடைமுறைபடுத்த முடியாமல் போனது.
இதனைதொடர்ந்து, லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் உருவாக போவதாக செய்திகள் வெளியான நிலையில் பல்வேறு நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இதன்பின் கடந்த ஆண்டு இப்படத்தின் படபிடிப்பு முடிந்து 'பொன்னியின் செல்வன்' திரைபடம் வெளியானது.
மேலும் மிகபிரமாண்டமாக உருவாகியிருந்த இப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி மிகபெரிய ஹிட்டானது. பொன்னியின் செல்வன் திரைபடத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் படபிடிப்பு சுறுசுறுப்பாக நடைபெற்று திரையரங்குகளில் வெளியாக தயாராகி கொண்டிருக்கிறது.
இதுபோன்ற நிலையில் தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் புரோமோஷனில் மணிரத்னம் கவனம் செலுத்தி வருகிறார். இதன்படி, ஹைதராபாத்தில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சியில் மணிரத்னம், "பொன்னியின் செல்வன் படம் உருவாகுவதற்கு ராஜமவுலி தான் முக்கிய காரணம். சினிமா துறையில் வரலாற்று கதையான பாகுபலியை போன்ற படங்களை இயக்கி வெற்றி பெற்று எடுத்துகாட்டாக இருக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.