#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாபெரும் வெற்றி இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் சூப்பர் ஸ்டார் - ரசிகர்கள் உற்சாகம்!
இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் படம் தான் தர்பார் திரைப்படம். பொதுவாக AR முருகதாஸ் படம் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் AR முருகதாஸ் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தற்போது மாபெரும் வெற்றி இயக்குனரான கே. எஸ். ரவிக்குமார் அவர்களுடன் இணைகிறார் என்ற புதிய தகவல் வந்துள்ளது.
இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து மாபெரும் வெற்றிப் படங்களான முத்து, படையப்பா மற்றும் லிங்கா படத்தை இயக்கியுள்ளார். தற்போது தொடர்ந்து மீண்டும் ரஜினி மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரின் கூட்டணி இணைய உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தயாரிப்பாளர் தாணு தான் படத்தை தயாரிக்க போகிறாராம்.ரஜினி மற்றும் கே.எஸ். ரவிக்குமார் மீண்டும் இணைய உள்ளதால் கண்டிப்பாக இந்த படமும் ஒரு மாஸ் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.