மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
21 ஆண்டுகளுக்கு பின்னர் திடீரென்று சந்தித்துக் கொண்ட ரஜினி மற்றும் கமல் என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்களாக இருந்து வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் 80களின் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் நடித்து தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியுள்ளனர்.
இது போன்ற நிலையில் ரஜினிகாந்த் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பும், கமலஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பும் ஒரே ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிற்கு இருவரும் வந்து நிலையில் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டனர்.
மேலும் கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வது நடைபெற்றிருக்கிறது. இருவரும் நலம் விசாரித்துக் கொண்டு தங்கள் படங்களை குறித்தும் பேசிக் கொண்டுள்ளனர் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த சந்திப்பில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரஜினி மற்றும் கமலின் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.