என்னடா இது? ரஜினி ரசிகர்களால் ராகவா லாரன்ஸிற்கு ஏற்பட்ட மன வேதனை.! என்ன காரணம்.?
நடிகர், இயக்குனர், நடன அமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் 1993 ஆம் ஆண்டு வெளியான "ஜென்டில் மேன்" படத்தின் பின்னணி நடனக் கலைஞராக அறிமுகமானார். அதன்பின்னர் 1999ஆம் ஆண்டு "ஸ்பீட் டான்சர்" என்ற தெலுங்குப் படத்தில் நடிகராக அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழில் பார்த்தேன் ரசித்தேன், உன்னைக் கொடு என்னைத் தருவேன், பார்த்தாலே பரவசம், அற்புதம், பாபா, ஸ்டைல், தென்றல், திருமலை, மாஸ் உள்ளிட்ட பல படங்களில் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். தான் சம்பாதிக்கும் பணத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
படங்களில் நடித்து வரும் பணத்தில் மக்களுக்கு உதவிகள் செய்வதாலும், சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர்களாலும், ராகவா லாரன்ஸ் தான் நடிக்கும் படங்களின் டைட்டில் கார்டில் "மக்கள் சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை வைத்துக்கொண்டார்.
இதை சில ரஜினி ரசிகர்கள் ஏற்றுக்கொண்டாலும், ரஜினி ரசிகர்கள் இந்தப் பட்டத்தை மாற்ற வேண்டும் என்று ராகவா லாரன்ஸை திட்டி வருகின்றனர். இதனால் கடுப்பாகி மனவேதனை அடைந்த இவர், இனிமேல் தன்னுடைய படத்தில் இப்படி பட்டப்பெயர் போட வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.