திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சூப்பர்.. தலைவா! தனது மூத்த மகளுக்காக நடிகர் ரஜினி எடுத்துள்ள முடிவு.! உற்சாகத்தில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினி அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் கடலூர் பகுதிகளை சுற்றி நடைபெற்று வருகிறது.
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா அடுத்ததாக அதர்வா நடிப்பில் புதிய படமொன்றை இயக்கவுள்ளாராம். இந்த படத்தில் ரஜினி தனது மகளுக்காக சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.