திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் ரெட் கார்டா.. உண்மையை கூறிய பிரபலம்.?
திருச்சியைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் ஸ்ரீதர் தற்போது பேசுபொருளாக இருக்கும் நடிகர்களின் "ரெட் கார்டு" சம்பவம் பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், "தயாரிப்பாளர் கவுன்சிலில் இருந்து முறையான அறிவிப்பு வெளிவரவில்லை" என்று கூறினார்.
மேலும், இதேபோல் முன்பு ரஜினி ஒருமுறை ரெட் கார்டு விஷயத்தில் சிக்கிய சம்பவம் குறித்துக் கேட்டதற்கு ஸ்ரீதர், "காஞ்சிபுர விநியோகஸ்தர் சங்க தலைவராக இருந்த சிந்தாமணி முருகேசன் என்பவர் தான் ரஜினிக்கு ரெட் கார்டு அறிவித்திருந்தார்.
அப்போது நாகிரெட்டி "உழைப்பாளி" படத்தை அறிவித்திருந்தார். அப்போது திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் ராமானுஜம் கூட்டிய கூட்டத்தில் ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்திக், பிரபு ஆகியோர் கலந்துகொண்டனர்.
விநியோகஸ்தர் சங்கம் தடை விதித்தாலும், படத்தை எங்களுக்கு நேரடியாக கொடுத்தால் நாங்கள் வெளியிடுகிறோம்" என்று கூறவும், அந்த பிரச்சனை ஜெயலலிதாவிடம் சென்றது. அவர் தலையிட்டு உழைப்பாளி திரைப்படம் வெளியிட வைத்தார்" என்று ஸ்ரீதர் கூறியுள்ளார்.