மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட அட.. வயசானாலும் உங்க அழகும், ஸ்டைலும் வேற லெவல்.! இணையத்தில் வைரலாகும் லால் சலாம் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி லைக்கா நிறுவனம் தயாரிப்பில் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் முக்கிய கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா ராஜசேகர், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் லால் சலாம் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நடிகர் ரஜினி மொய்தீன் பாய் தோற்றத்தில் ஸ்டைலாக நடந்து வருகிறார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் வயசானாலும் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலும் அழகும் வேற லெவல்தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Moideen Bai 💘 pic.twitter.com/aBDHNEEEFL
— Ramesh Kanna (@RameshK76322709) June 13, 2023