மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லால் சலாம் படத்தின் காட்சிகளை பார்த்த சூப்பர் ஸ்டார்.! மகளிடம் என்ன வார்த்தை கூறியுள்ளார் தெரியுமா??
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யா இதற்கு முன்பு தனுஷின் 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில்
பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
மேலும் படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினி நடிக்கவுள்ளார். கிட்டத்தட்ட 45லிருந்து 50 நிமிடங்கள் வரை ரஜினி இந்தப் படத்தில் தோன்றுவார் என கூறப்படுகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் இயக்குனரான ஐஸ்வர்யா இதுவரை எடுத்த காட்சிகளை ரஜினிகாந்திற்கு போட்டு காட்டியுள்ளாராம். அதனை கண்டு வியந்து போன ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவை பாராட்டி தள்ளியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் தனது குடும்பத்தில் இப்படியொரு திறமை வாய்ந்த சிறந்த இயக்குனரா! என பெருமைபட்டாராம். இதனால் ஐஸ்வர்யா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.