திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"ரஜினிக்கு ரெடி பண்ணிய கதையில் சிம்பு!" இயக்குனருக்கு வாழ்த்து கூறிய ரஜினி!
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" என்ற படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி. இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை பார்த்த ரஜினி, தேசிங்கு பெரியசாமியை அழைத்து பாராட்டியதோடு, தனக்கு எதாவது கதை இருக்கிறதா என்று அவரிடம் கேட்டாராம்.
இதையடுத்து தேசிங்கு பெரியசாமி ரஜினியிடம் ஒரு கதையை கூறியிருக்கிறார். அந்தக் கதை ரஜினிக்கும் பிடித்துப்போகவே, ரஜினியும் அந்தக் கதைக்கு ஓகே சொன்னாராம். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் அப்படியே நின்றுவிட்டதாம்.
அந்தக் கதையைத் தான் தற்போது சிம்புவுக்கு ஏற்றபடி மாற்றம் செய்து, அவரிடம் கதையைக் கூறி, சிம்புவை நடிக்க வைக்க சம்மதம் வாங்கியிருக்கிறார் தேசிங்கு பெரியசாமி. இன்னும் பெயரிடப்படாத இப்படம் சிம்புவின் 48வது படமாகும்.
இந்தப்படத்தை கமலின் "ராஜ்கமல் பிலிம்ஸ்" தயாரிக்கிறது. இதனிடையே ரஜினி தேசிங்கு பெரியசாமிக்கு கால் செய்து "சூப்பரா பண்ணுங்க" என்று தன்னுடைய வாழ்த்துக்களை கூறி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.