மகள், மனைவியுடன் ரேஸிங் களத்தில் தல அஜித்; வைரல் வீடியோ இதோ.!
அயலான் படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்.. சிவகார்த்திகேயன் பெருமிதம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியான அயலான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்கியிருந்தார்.
வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி, அயலான் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் மொத்தமாக 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே அயலான் திரைப்படம் நேற்று தெலுங்கில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் மிக சிறப்பாக கையாளப்பட்டுள்ளதாக ரசிகர்கள் மற்றும் துறை பிரபலங்கள் பலரும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தின் 2ம் பாகம் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அயலான் திரைப்படத்தை பாராட்டியுள்ளார். அதன்படி தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சிவகார்த்திகேயன், "அயலான் திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி சார் படம் பிடித்திருப்பதாக கூறினார். மேலும் தான் வித்தியாசமான கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து நடிப்பது பிடித்திருப்பதாகவும் கூறினார்" என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அயலான் திரைப்படம் வரும் பிப்ரவரி 16ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.