திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த விஷயத்தை மட்டும் பண்ண மாட்டேன் அதிரடியாக கூறிய ரஜினிகாந்த் வியப்படைந்த ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். 80களின் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி வருகிறார். இவரது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஸ்டார் எனும் பெயர் பெற்றிருக்கிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற நிலையில் ரஜினிகாந்த் நடிப்பின் உச்சத்தில் இருக்கும் காலகட்டத்தில் விளம்பர படங்களில் நடிப்பதற்கு கேட்டார்களாம். ஆனால் கோடி ருபாய் கொடுத்தாலும் ரசிகர்களை ஏமாற்றும் செயலை செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டாராம் ரஜினிகாந்த். அச்செய்தி சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் ரஜினிகாந்த்தை பாராட்டி வருகின்றனர்.