திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மலேஷியாவில் மீண்டும் தன்னை உச்ச நட்சத்திரமாக உறுதி செய்த ரஜினிகாந்த்; அசத்தல் தகவல் இதோ.!
தமிழில் கடந்த 2016 ம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில், நடிகர்கள் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, சாய் தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், வின்ஸ்டன் சாவோ, நாசர், ஜான் விஜய், கலையரசன், கிஷோர், ரித்விகா உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் கபாலி. இப்படம் மலேஷியாவில் வாழும் தமிழர்களில், டானாக வலம்வரும் நாயகனை கருவாக வைத்து இருந்தது. இப்படம் மிகப்பெரிய வெற்றியையும் அடைந்தது.
அதேபோல, கடந்த 2023 ம் ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர்கள் ரஜினிகாந்த், மிர்னா மேனன், சிவராஜ்குமார், தமன்னா, விநாயகன், வசந்த் ரவி, மோகன்லால், யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடிக வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படம் வரவேற்பு மற்றும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை அடைந்தது.
இந்நிலையில், மலேஷிய திரை வரலாற்றில், தமிழ்ப்படங்களில் ரஜினிகாந்தின் கபாலி மற்றும் ஜெயிலர் திரைப்படங்கள் சாதனை படைத்துள்ளன. அதாவது மலேஷிய மண்ணில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் அதிக வசூல் பெற்ற படங்களில் முதல் இடத்தில் இருக்கிறது.
அதேபோல, கபாலி திரைப்படம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு, அவர்களின் ஆதரவுடன் பல நாட்கள் ஓடியவெற்றிப்படங்களில் முதல் படமாக இருக்கிறது. ரஜினி என்றுமே தன்னை சூப்பர்ஸ்டாராக நிலைநிறுத்திக்கொள்ள இவை ஒரு காரணமாக அமைந்துள்ளன.