திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பொதுமக்களுக்காக இலவச மருத்துவமனை கட்டும் ரஜினிகாந்த்? வெளியான தகவல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது இவர் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்படி இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பொது மக்களுக்கு இலவசமாக புதிய மருத்துவமனை கட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர் ஏற்கனவே திருமண மண்டபம், ஆசிரமம் மற்றும் பள்ளிக்கூடம் என்று வைத்திருக்கும் ரஜினிகாந்த் பொது மக்களின் பயன்பாட்டிற்காக புதிய மருத்துவமனை ஒன்றை கட்ட முழுதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதற்குக் காரணம் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இப்படி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.