திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ராகவா லாரன்ஸின் மாற்றம் அறக்கட்டளை உதவி; மனதார பாராட்டிய ரஜினிகாந்த்.. வைரலாகும் ஆடியோ.!
நடிகர் எஸ்ஜே சூர்யா - ராகவா லாரன்ஸ் இணைந்து, ஏழ்மை நிலையில் உள்ள விவசாய மக்களுக்கு விவசாய உபகரணங்கள் வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தனர். இவர்களின் செயல் பலதரப்பிலும் பாராட்டுகளை பெற்றது.
இந்த விசயத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டுகளை தெரிவித்து ஆடியோ வடிவில் பேசி அனுப்பி இருக்கிறார். அதனை லாரன்ஸ் தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ஆடியோவில், "வணக்கம் லாரன்ஸ் மாஸ்டர். நீங்கள் பல ஆண்டுகளாக நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்துள்ளீர்கள்.
இப்போது இன்னும் நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மாற்றம் என்ற அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறீர்கள். இன்னும் பல ஆயிரம் பேருக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். அதற்கு அந்த ஆண்டவனின் அருள், மக்களின் துணை எப்போதும் இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.
ராகவா லாரன்ஸ் தனது அறக்கட்டளை வாயிலாக பல ஆயிரம் மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார். அவை பெரிய அளவில் தொடர்ந்து தொடருகிறது.
I received voice text wishes for #Maatram initiative from Thalaivar My Guru super star @rajinikanth. I’m very very very happy and touched by your constant support. Thank you so much for your blessings. Guruve Saranam 🙏🏼🙏🏼#Maatram #serviceisgod pic.twitter.com/qgXSmlQkEa
— Raghava Lawrence (@offl_Lawrence) May 4, 2024