தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
காலில் விழுந்த ரஜினிகாந்த்; கழுவி ஊற்றும் புளூ சட்டை மாறன்.. திடீர் ஆதரவும், நையாண்டியும்..!
இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத தமிழ் திரையுலக நாயகன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் நல்ல வெற்றியை அடைந்தது. படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே இமயமலை புறப்பட்ட ரஜினிகாந்த், பல இடங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளுநராக பணியாற்றி வரும் தனது நண்பர் சி.பி ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்தார். அதேபோல, நேற்று உத்திரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யானத்தை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, யோகியின் கால்களில் விழுந்து ஆசி வாங்கினார்.
இந்த விஷயம் ரஜினி ஆதரவாளர்களிடையே பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஏனெனில் யோகி இறைபனிக்காக தன்னை அர்ப்பணித்தவர் என்பதால், கடவுள் பக்தி கொண்ட ரஜினிகாந்த் யோகியின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.
ஆனால், ரஜினியின் மீது நேரடியாகவும், மறைமுகமாவும் வன்மத்தை கக்கிவந்த பலரும், இன்று ரஜினி தன்னை விட வயது குறைவான நபரின் கால்களில் விழலாமா? அது தகுமா? யோகி யோக்கியரா? என பல கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.
மேலும், இவ்வுளவு நாட்கள் கன்னடன் ரஜினி, தமிழர்களை ஏற்றுப்பிழைக்கிறார் என விமர்சித்த பலரும், ரஜினி யோகியின் கால்களில் விழுந்து தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் இழுக்கை சேர்த்துவிட்டார் என தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு ஆதரவும், எதிர்ப்புமாக எக்ஸ் (ட்விட்டர்) பக்கம் பல கருத்துக்களை கொண்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் முகாமிட்டுள்ள ரஜினிகாந்த், அயோத்தி ராமர் கோவிலுக்கும் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்தின் இந்த செயலை கடுமையாக விமர்சித்து வரும் நீலச்சட்டை மாறனின் ட்விட் பதிவு உங்களின் பார்வைக்காக..
குறள் 272:
— Blue Sattai Maran (@tamiltalkies) August 20, 2023
வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத் தானறி குற்றப் படின்.
விளக்கம்:
தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.
குறள் 275:
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென் றேதம் பலவுந் தரும்.… pic.twitter.com/BY9IPTvS94
Here are the two opposing views..
— Ramesh Bala (@rameshlaus) August 19, 2023
View 1: A large section of the People of TN are upset that #Superstar fell on the feet of UP CM..
View 2: UP CM is Mahant of #Ghoraknath Mutt.. So #Superstar fell on his feet for religious reasons..
Your Take? pic.twitter.com/xhAZfVqlqU
கடந்த சில வாரங்களாக கபாலிக்கு சொம்பு தூக்கிய திருப்பூர் சுப்பு, செய்யாறு OLA, ரமேஷ் பாலா, பணஞ்செயன் மற்றும் திரையுலக அட்டகத்திகளை, மாய்ந்து மாய்ந்து பேட்டி எடுத்த செய்தி மற்றும் Youtube. சேனல்களே..
— Blue Sattai Maran (@tamiltalkies) August 19, 2023
இவர்களை மீண்டும் பேட்டியெடுங்கள். 'காலில் விழுந்த காலா' பற்றி கருத்து கேளுங்கள்.…
உங்கள் புகழுக்கும், உயரத்திற்கும் இந்த சறுக்கல்கள் தேவையா ரஜினிகாந்த்?
— Blue Sattai Maran (@tamiltalkies) August 19, 2023
ஒவ்வொரு பிரபலத்திற்கும் இறுதிக்கால வரலாறு முக்கியம். இதை உணரவே மாட்டீர்கள் போல. pic.twitter.com/ERPIgwyt8H