#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தீபாவளி தினத்தில் வெளியாகும் ராம்சரண் படத்தின் முக்கிய அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தெலுங்கு சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருப்பவர் ராம்சரண் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றநிலையில் இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க, கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது மேலும் இந்த படத்தின் ஐந்து பாடல்களுக்காக மட்டும் சுமார் 90 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஜரகண்டி பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.