மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒருவழியா என் அம்மாவோட கனவை நிறைவேத்திட்டேன்! செம ஹேப்பியில் நடிகர் ராம்சரண்! அப்படியென்ன கனவு தெரியுமா?
தெலுங்கில் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆச்சார்யா. இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம்சரண் தயாரித்துள்ளார்.
அதுமட்டுமின்றி ஆச்சார்யா படத்தில் தனது தந்தையுடன் இணைந்து நடிகர் ராம்சரண் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ராம்சரண் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது தந்தையுடன் இணைந்து நடித்தது குறித்து கூறியதாவது, நானும் என் அப்பாவும் ஒரு படத்திலாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது என் அம்மாவின் ஆசை.
ஆனால் அப்பா அரசியலுக்கு சென்றதால், அவரது கனவு நிறைவேறாமல் இருந்தது. ஆனால் தற்போது எனது அப்பா மீண்டும் படங்களில் நடித்துவருகிறார். அதிர்ஷ்டவசமாக ஆச்சார்யா படத்தில் நானும் அப்பாவும் சேர்ந்து நடித்துவிட்டோம். என் அம்மாவின் ஆசையை நிறைவேற்றி விட்டேன் என கூறியுள்ளார்.