திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தளபதி 68ல் இந்த பிரபல நடிகையும் நடிக்கப் போறாங்களா.? வைரலான செய்தியால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் இளைய தளபதி விஜய். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தனது தந்தையின் மூலம் சினிமாவில் நுழைந்திருந்தாலும் தற்போது தனது நடிப்பு திறமையின் மூலம் பல ஹிட் திரைப்படங்களை அளித்து தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லியோ. இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்து தற்போது வரை ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
இது போன்ற நிலையில் இப்படத்திற்கு பின்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு G.O.A.T என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை பலர் ட்ரோல் செய்து வந்தாலும் விஜய் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படத்தில் தற்போது ரம்யா கிருஷ்ணனும் இணைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இச்செய்தி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.