திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
முதன்முறையாக அட்ஜெஸ்மெண்ட் குறித்து மனம் திறந்த நடிகை ரம்யா நம்பீசன்.. வைரலாகும் வீடியோ.?
மலையாள நடிகை ரம்யா நம்பீசன், திரைத் துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மலையாளத்தில் லீட் ரோல்களில் நடித்துக்கொண்டிருந்த அவர், தமிழில் "ஒரு நாள் ஒரு கனவு" படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், குள்ளநரிக்கூட்டம், பீட்சா, சேதுபதி, மற்றும் தமிழரசன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து பாராட்டி வருகிறார்.
நடிகையாக மட்டுமின்றி, பாடகியாகவும் முத்திரை பதித்து வரும் அவர், தமிழிலும், மலையாளத்திலும் நிறைய பாடல்களை பாடி வருகிறார். இந்நிலையில், திரைத்துறையில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேட்டி ஒன்றில் அவர்...
"பொதுவாகவே எல்லா மொழித் திரைத்துறையிலும் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை நடிகைகள் இருப்பதை மறுக்க முடியாது. அப்படி நடக்கும்போது அதைப்பற்றி பொதுவெளியில் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். மேலும் சம்மந்தப்பட்டவரிடம் உறுதியாக அதை மறுக்க வேண்டும்' என்று கூறினார்.