திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கண்ணை பறிக்கும் பட்டு புடவையில், கல்யாண பெண் போல ஜொலிக்கும் ரம்யா! கிறங்கிபோன ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதனை தொடர்ந்து அவர் ஆண் தேவதை என்ற படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு சரியான பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் ரம்யா பாண்டியன் மொட்டைமாடியில் புடவையில் கவர்ச்சி போட்டோ ஷூட் செய்திருந்தார். அது இணையத்தில் வைரலாகி அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து ரம்யா பாண்டியன் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். இதில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து ரம்யா விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நிகழ்ச்சியின் இறுதி வரை சென்றார். மேலும் அதன் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரம்யாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் தேடி வருகிறது. அடுத்ததாக அவர் சூர்யாவின் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் ரம்யா அவ்வப்போது வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது சிவப்பு நிற பட்டு புடவையில் திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.