திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"என்ன எதிர்ப்பு வந்தாலும் அவரைத்தான் காதல் திருமணம் பண்ணுவேன்" வைரலாகும் ரம்யா பாண்டியனின் பேட்டி..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் ரம்யா பாண்டியன். இவர் இன்ஸ்டாகிராமில் தனது இடுப்பழகை காட்டி புகைப்படம் எடுத்து பதிவிட்டு வைரலானது. இதனையடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதற்கு முன்பாக ஒரு சில திரைப்படங்கள் நடித்திருந்தாலும் இப்புகைப்படத்தின் மூலமாகவே ரம்யா பாண்டியன் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்பு மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் ரம்யா பாண்டியன்.
இது போன்ற நிலையில் சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டியில் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, "கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன். யார் எதிர்த்தாலும் காதலிப்பவரை கட்டாயமாக திருமணம் செய்வேன்" என்று கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.