திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"பட வாய்ப்புக்காக அந்த விஷயத்தை பண்ணிக்கிட்டே தான் இருப்பேன்" பேட்டியில் உண்மையை உடைத்த ரம்யா பாண்டியன்..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ரம்யா பாண்டியன். இவர் 2015 ஆம் வருடம் வெளியான 'ஜோக்கர்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் இப்படம் வெற்றி பெறவில்லை.
இதனையடுத்து தொடர்ந்து பட வாய்ப்புக்காக காத்திருந்தார் ரம்யா பாண்டியன். மேலும் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து கொண்டிருந்தார். சமீபத்தில் இவர் எடுத்த போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாக பரவியது. இப்புகைப்படத்தால் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவாகியது.
இது போன்ற நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து பாராட்டை பெற்றார். சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் பட வாய்ப்புக்காக இவர் செய்த விஷயங்களை கூறியிருக்கிறார்.
ரம்யா பாண்டியன் கூறியதாவது, "பட வாய்ப்புகளை விட நான் கலந்து கொண்ட ரியாலிட்டி ஷோ தான் எனக்கு ரசிகர்களை பெற்று தந்தது. என் புகைப்படம் வைரலானது எனக்கு தெரியாது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். எந்த மாதிரி கதாபாத்திரம் வேண்டுமானாலும் நடிக்க ரெடியாக இருக்கிறேன். பட வாய்ப்புகள் வரும் வரை தொடர்ந்து போட்டோ சூட் செய்து கொண்டே தான் இருப்பேன்" என்று ரம்யா பாண்டியன் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.